புகைப்பட கண்காட்சி

ByEditor 2

Jan 24, 2025

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்று (24) யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகியது.

குறித்த கண்காட்சி 27 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ளது.

புகைப்பட ஊடகவியலில் சர்வதேச விருதுகளை வென்ற புகைப்படங்கள் உட்பட, புகைப்படத்தினூடு கதை சொல்லும் பல புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் H.E.பொன்னீ ஹொர்பஜ் (H.E.Bonnie horbach), யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன், நெதர்லாந்து தூதரகத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *