கண்டி மற்றும் மஹியங்கனை இரண்டு வீதிகளுக்கு பூட்டு

ByEditor 2

Jan 24, 2025
xr:d:DAFrZ0x9niE:19,j:1766954653425817601,t:24020505

கண்டி மற்றும் மஹியங்கனை வீதியின் சில வீதிகளை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தென்னேகும்புர-ரிகில்லகஸ்கட்ட-ராகல வீதி மற்றும் கண்டி-மஹியங்கனை-பதியதலாவ வீதிகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன. 

சீரற்ற வானிலை காரணமாக வீதியில் பாறைகள் விழுந்ததால் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதன்படி, வீதிகளுக்கு மேலே உள்ள பாறைகளின் பகுதி அகற்றப்படும் வரை, வீதி மேற்பரப்பில் இருந்து பாறைகளை அகற்றுவது ஆபத்தானது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள்  மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி  அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *