சோதனையின்றி விடுவிக்கப்படும் கொள்கலன்கள்

ByEditor 2

Jan 24, 2025

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் நெரிசல் காரணமாக, சோதனைக்கு உட்படுத்தாமல் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

“இந்த பணிகள் அளவுகோல்களின்படி செய்யப்படுகிறது. இந்த முன்னூறு என்ற எண்ணிக்கை மூன்று பேர் கொண்ட குழு மூலம் விடுவிக்கப்படுகிறது. துறைமுகத்திற்குள் வரும் 2,000 கொள்கலன்களையும் நாங்கள் ஒருபோதும் சோதனை செய்து விடுவிக்க முடியாது. எனவே நாங்கள் சிறிய எண்ணிக்கையிலான கொள்கலன்களை வெளியிடுகிறோம். “புதிய யார்டுகளுக்குச் செல்லாமல் இந்தப் பிரச்சினை தீர்க்க முடியாது.”

சுங்க தொழிற்சங்க கூட்டணி சமீபத்தில் வெளியிட்ட தகவல்களிலிருந்து இந்தப் பிரச்சினை பொது விவாதத்திற்கு உட்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *