அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

ByEditor 2

Jan 22, 2025

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், நுகர்வோர் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது நிலக்கடலை கிலோ ரூ.1095 ஆகவும், புதிய விலை ரூ.995 ஆகவும் உள்ளது.

ஒரு கிலோ பிரவுன் சீனியின் முன்னைய விலை 340 ரூபாவாகவும், புதிய விலை 300 ரூபாவாகவும் இருந்தது

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் முன்னைய விலை 210 ரூபாவாகவும், புதிய விலை 180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

சிவப்பு கௌபி கிலோ ஒன்றின் முன்னைய விலை 795 ரூபாவாகவும், புதிய விலை 765 ரூபாவாகவும் காணப்பட்டது

ஒரு கிலோ உலர் நெத்தலி கிலோ முன்னைய விலை 960 ரூபாவாகவும், புதிய விலை 940 ரூபாவாகவும் இருந்தது

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் முன்னைய விலை 845 ரூபாவாகவும், புதிய விலை 830 ரூபாவாகவும் இருந்தது

பாஸ்மதி அரிசி (பிரீமியர்) கிலோ முன்னைய விலை ரூ.655 ஆகவும், புதிய விலை ரூ.645 ஆகவும் இருந்தது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் முன்னைய விலை 240 ரூபாவாகவும், புதிய விலை 230 ரூபாவாகவும் இருந்தது.

ஒரு கிலோ துவரம் பருப்பின் முந்தைய விலை 290 ரூபாவாகவும், புதிய விலை 288 ரூபாவாகவும் இருந்தது

ஒரு கிலோ வெள்ளை சீனியின் முந்தைய விலை 242 ரூபாவாகவும், புதிய விலை 240 ரூபாவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *