விதி மீறும் சாரதிகளை பிடிக்க – மென்பொருள்

ByEditor 2

Jan 22, 2025

கொழும்பு நகரில் போக்குவரத்து விதி மீறல்களைச் செய்யும் சாரதிகளை அடையாளம் காண புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கை பொலிஸாரால் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வீதி விபத்துகளைக் குறைப்பதும், போக்குவரத்து விதி மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதும் இந்தப் புதிய திட்டத்தின் நோக்கமாகும்.

அண்மைய காலங்களில் கொழும்பு நகரில் அதிக எண்ணிக்கையிலான வீதி விபத்துகள், சாரதிகளின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளன.

இந்த வீதி விபத்துகளைக் குறைப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மென்பொருளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றது.

இந்தப் புதிய மென்பொருள் ஊடாக கொழும்பு பிரதான சி.சி.டி.வி செயல்பாட்டு அறையில் உள்ள சி.சி.டி.வி அமைப்பு மூலம் கொழும்பு நகரில் போக்குவரத்து விதி மீறல்களைச் செய்யும் சாரதிகள் காண்காணிக்கப்படவுள்ளனர்.

இதற்கமைய போக்குவரத்து வீதி மீறலை செய்யும் சாரதிகள் வசிக்கும் பொலிஸ் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டு, அதற்கான தண்டப் பண சீட்டு வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *