3 புதிய நியமனங்கள்

ByEditor 2

Jan 22, 2025

அரச சேவையில் மூன்று சிரேஷ்ட பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

அதன்படி, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.எச்.பி. பாலித பெர்னாண்டோவை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

எவ்வாறாயினும், குறித்த நியமனம் ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இதேவேளை, ஆர்.ஏ. சந்தன சமன் ரணவீர ஆராச்சி காணி ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை விவசாய சேவையின் விசேட தர அதிகாரியான கலாநிதி ஈ.ஆர்.எஸ்.பி. எதிரிமான்னவை விவசாய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *