அரசாங்கத்திற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் உலக வாங்கி

ByEditor 2

Jan 21, 2025

அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) தெரிவித்தார்.

இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் உள்ளிட்ட உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், தூய்மையான இலங்கை (Clean SriLanka), கிராமப்புற வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, கல்வி, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கு அபிவிருத்திக்கான புதிய திட்டங்களுக்கு உதவி வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *