இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை!

Byadmin

Jan 21, 2025

இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த மியான்மார் கர்ப்பிணித்தாய் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (20) இரவு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது.

ஆண் குழந்தையை பிரசவித்த மியான்மார் கர்ப்பிணித்தாய்

குறித்த படகு கரைக்கு வரமுடியாத நிலையில், கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு, பின்னர் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

மியன்மார் அகதிகள் பயணித்த படகில் 45 சிறுவர்கள், 24 பெண்கள்,46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் இலங்கைக்கு அகதிகளாக வந்திருந்தனர். இவ்வாரு வந்தவர்களில் கர்ப்பிணி தாய் ஒருவரும் தாயும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த கர்ப்பிணித்தாய் நேற்று (20) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *