தங்க நெக்லஸ்களை கடத்திவந்த பெண் கைது

ByEditor 2

Jan 20, 2025

தலை மற்றும் கழுத்தை சுற்றி அணியும் “சோல்” மேலங்கியில் ஒரு போலிப் பாக்கெட் தயாரித்து அதற்குள் 4.9 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள03 தங்க நெக்லஸ்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துசெல்ல முயன்ற பெண், ஞாயிற்றுக்கிழமை (19) காலை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள்குழுவால் கைது செய்யப்பட்டார்.

வத்தளை, ஹெந்தலையைச் சேர்ந்த54 வயதுடைய பெண்மணி, விமானம் மூலம் நாட்டிற்கு பல்வேறு பொருட்களை கொண்டு வந்து விற்பனைசெய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணுக்கு பயண உதவியாளராக பணிபுரிகிறார்.

துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்கவிமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (19) காலை 05.15 மணிக்கு வந்திருந்தார்.

அவர் தனது கழுத்தை சுற்றி அணிந்திருந்த “சோல்” சால்வைக்குள் விசேடமாக தைக்கப்பட்ட போலிபாக்கெட்டுக்குள் 216 கிராம் எடையுள்ள இந்த மூன்று தங்க நெக்லஸ்களை மறைத்து வைத்திருந்த போது,பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைக்காக அந்தப்பெண்ணையும் தங்க நெக்லஸையும் கட்டுநாயக்க நாயக்கந்த சுங்கத் தடுப்பு அலுவலக அதிகாரிகளிடம்ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்ணின் முக்கிய தொழிலதிபர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமாக தங்க நெக்லஸை எடுத்துச் சென்றபோதுகட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 👍மற்றவர்களும் பயனடைய அதிகமாக Share செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *