காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த படகு ஒன்று இன்று (19) காலை நீர் கசிவு காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.
குறித்த படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் நடுவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், பின்னர் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்க அமைவாக நடத்தப்பட்ட பொது ஏலத்தில் ஒரு நிறுவனத்தால் இந்தப் படகு வாங்கப்பட்டது, மேலும் அது பழுதுபார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், படகு மூழ்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.