இன்றும் ரயில்கள் சேவையில் இல்லை

ByEditor 2

Jan 19, 2025

இன்றும் (19) பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று குறுகிய தூரம் பயணம் மேற்கொள்ளும் 15 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தரம் இரண்டிலிருந்து தரம் 1 தரமுயர்வு செய்வதற்காக ரயில் சாரதிகளுக்கான பரீட்சை இன்று நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களில் பல ரயில் சேவைகளை ரயில்வே திணைக்களம் இரத்துச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இதற்கிடையில், இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் இன்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்படலாம் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *