28 கோடி ரூபாவுடன் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

ByEditor 2

Jan 18, 2025

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொயை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் சாதனை படைத்துள்ளது.

குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டொன்றில் இருந்து இந்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் சிறைச்சாலைக்குள் இருந்தவாறு போதைப்பொருள் வர்த்தகத்தை வழிநடத்தி வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 இந்த சுற்றிவளைப்பின் போது 18 கிராம் ஐஸ் போதைப்பொருள், கெப் ரக வாகனம் ஒன்றும் மற்றும் வேன் ஒன்றும்  பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *