வாட்ஸ் அப் உரையாடலை தெரியாமல் அழித்துவிட்டால் அதனை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாட்ஸ் அப்
இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக Whatsapp இணையத்தை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது குறுஞ்செய்தியில் தொடங்கி பண வர்த்தனை வரை அனைத்தும் வாட்ஸ் அப்பினை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு நாம் அனுப்பும் குறுஞ்செய்தி சில தருணங்களில் தெரியாமல் அழிந்து விடுகின்றது. இதனை மீட்டெடுக்கும் வழிமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை.

எவ்வாறு மீட்டெடுப்பது?
கூகுள் டிரைவ் (Google Drive) மற்றும் iCloud இல் பேக்அப் செய்திருந்தால் அதன் மூலம் சாட்டை திரும்பப் பெறலாம்.
நீக்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடலை மீட்பது பேக்அப் செட்டிங் மற்றும் பயன்படுத்தப்படும் சாதனத்தைப் பொறுத்தது. ஆண்டிராய்டு மற்றும் iOS இரண்டிலும் வெவ்வேறு வழிமுறையைப் பின்பற்றி சாட்டை மீட்கலாம்.
ஆண்ட்ராய்டு மொபைல் பயன்ரகள் Settings > Chats > Chat Backup என்ற பகுதிக்குச் சென்று பேக்அப் இருக்கிறதா என்று சரிபார்க்கவும்

பின்பு வாட்ஸ்அப்பை Uninstall செய்யவும். மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்த்து, உள்ளே நுழையுவும்.
அப்போது பேக்அப் மூலம் வாட்ச்அப் மூலம் வாட்ஸ்அப் உரையாடல்களை மீட்கும் ஆப்ஷனை தேர்வுசெய்யவும்.

ஐபோன் (iOS) பயனர்களும் முதலில் Settings > Chats > Chat Backup என்ற பகுதிக்குச் சென்று பேக்அப் இருக்கிறதா என்று சரிபார்க்கவும்.
பிறகு, வாட்ஸ்அப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்து வாட்ஸ்அப் சாட்களை மீட்டெடுக்கவும்.

ஆண்டிராய்டு பயனர்கள் மட்டும் இன்டர்னல் மெமரியில் உள்ள பேக்அப் கோப்பை பயன்படுத்தி மீட்டெடுக்கலாம்.
இதற்கு ஃபைல் மேனேஜர் செயலியைத் திறந்து அதில், WhatsApp > Databases என்ற ஃபோல்டருக்குச் செல்லவும். அதில் msgstore.db.crypt12 என்ற கோப்பைக் கண்டுபிடிக்கவும். பேக்அப் கோப்பு வேறு பெயரில் இருந்தால், அந்தக் கோப்பின் பெயரை msgstore.db.crypt12 என மாற்றவும். பிறகு வாட்ஸ்அப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்து பேக்அப் ஆப்ஷனைத் தேர்வுசெய்யவும்.
ஆண்டிராய்டு பயனர்கள் மட்டும் இன்டர்னல் மெமரியில் உள்ள பேக்அப் கோப்பை பயன்படுத்தி மீட்டெடுக்கலாம்.
