நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசங்களில் திடீர் சோதனை

ByEditor 2

Jan 17, 2025

நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பொலிஸ் பிரதேசங்களில் நடததப்பட்ட திடீர் சோதனையின் போது சந்தேகத்திற்குறிய 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பாக புதிதாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக்க தரமசேனவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் 38 பேரும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் 27 பேருமாக மொத்தம் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

 இதில் ஹொரோய்ன், ஐஸ் போதைப் பொருட்களை பாரியளவில் விற்பனை செய்பவர்கள் மற்றும் போதைப் பொருள் சிறு வியாபாரிகள், கசிப்பு விற்பவர்கள், நீதிமன்ற பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டவர்கள், குற்றச் செயல்களுக்காக பொலிஸார் தேடியவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அடங்குகின்றனர்.

 இவர்களில் ஒருசிலருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற்று தடுத்து வைத்து விசாரிக்கபடுவதுடன் ஏனையவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஸாஜ் நிலையம் என்ற தோரனையில்  நீர்கொழும்பு பிரதேசத்தில் சட்ட விரோதமாக    இயங்கும் “ஸ்பா” நிலையங்கள் முற்றாக அகற்றப்படும் எனவும் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்மசேன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *