வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் சமமான வேலை வாய்பை வழங்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் நேற்று (16) ஈடுபட்டனர்.
யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலிருந்து ஆரம்பமாகிய கவனயீர்ப்பு பேரணி, தபால் கந்தோர் வீதியூடாக யாழ். பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
இதன்போது கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள், பட்டதாரிகள் அணியும் உடைகளை அணிந்தவாறும், பட்டதாரிகள் கூலித்தொழிலில் ஈடுபடுவதை சித்தரிக்கும் வகையிலும் விசித்திரமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.