ஊடகவியலாளர் மீதான தாக்குதல்

ByEditor 2

Jan 17, 2025

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள சிரேஸ்ர ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்கள் மீது நேற்றுக்காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

செய்தியாளர் பாஸ்கரனை தலைக்கவசத்தால் தலையில் தாக்கப்பட்டது. தொடர்பாகவும் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவ இடத்தை பொலிசார் நேரில் சென்று பார்வையிட்டதுடன் சம்பவத்துடன் தொடர்பு பட்ட இரண்டு சந்தேக நபர்களை நேற்று கைது செய்திருந்தனர்

குறித்த தாக்குதல் சம்பவத்தை பொலிசார் திசை திருப்பும் நோக்கில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எதிராக நேற்றுமாலை போலியான முறைப்பட்டை பதிவு செய்து கொண்டதுடன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பேரில் ஒருவரை குறித்த சம்பவத்திலிருந்து விடுவித்து மற்றைய ஒருவரையே இன்று மாலை நீதி மன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இதனை அடுத்து இன்று மாலை இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி போலீஸ் நிலையத்தின் கடமையிலுள்ள பதில் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக நடந்த விடயத்துக்கு போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மன்னிப்பு கோரியதுடன் குறித்த விடயம் தொடர்பாக மீள முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோரிதையடுத்து் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது

மற்றைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதுடன் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் உறுதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *