BMICH இல் ஆரம்பமாகும் ‘EDEX EXPO’

ByEditor 2

Jan 16, 2025

‘EDEX EXPO’ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி நாளை (17) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகிறது.

இந்த கண்காட்சி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

ஒரு அரங்கம் மெக்ரோ என்டர்டெயின்மென்ட், மற்றொன்று மோகோ மீடியா அகடமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மெக்ரோ என்டர்டெயின்மென்ட் அரங்கைப் பற்றி அதன் சிரேஷ்ட முகாமையாளர் பூரித விஜேவிக்ரம குறிப்பிடுகையில், தெரண ஊடக வலையமைப்பில் வசனம் எழுதுதல் முதல் போஸ்ட் புரொடக்ஷன் (Post production) வரை வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார்.

இந்த அரங்கம் இதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதைக் காண்பிக்கும் என குறிப்பிட்டார்.

மேலும், மோகோ மீடியா அகடமியின் சந்தைப்படுத்தல் தலைவர் கயேன் அகீல் தெரிவிக்கையில், இந்த அரங்கிற்கு வருகை தருவதன் மூலம், VFX, அனிமேஷன், விளையாட்டு மேம்பாடு போன்றவற்றுக்கு பதிவு செய்யும் மாணவர்கள் ரூ. 50,000 பதிவு சலுகையைப் பெறலாம் என்றார்.

இந்த செயற்பாடுகளுக்காக நிதி சிக்கல்கள் இருந்தால், இது தொடர்பில் மோகோ மீடியா அகடமியைத் தொடர்பு கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *