குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்புக்காவல்

ByEditor 2

Jan 15, 2025

ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், ஹங்வெல்ல, மீகொடை, ஹோமாகம, அத்துருகிரிய மற்றும் கொட்டாவை ஆகிய பகுதிகளில் அவர்கள் செய்த பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிள்களில் பயணித்து அந்தப் பகுதிகளில் 9 தங்க நகை கொள்ளை சம்பவங்களையும், ஏராளமான மோட்டார் சைக்கிள் திருட்டுகளையும் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, சந்தேகர் நபர்களால் திருடப்பட்ட 02 தங்க நகைகள், பென்டன் ஒன்று, உருகிய 09 தங்கத் துண்டுகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தும்மோதர பகுதியைச் சேர்ந்த 27, 28 மற்றும் 35 வயதுடையவர்களாவர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *