இணைய கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு

ByEditor 2

Jan 14, 2025

எந்தவொரு கையடக்க சேவை வழங்கும் நிறுவனங்களும் தமது இணைய கட்டணங்களை அதிகரிக்கவில்லை என, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் இணைய கட்டணங்களை இரகசியமான முறையில் அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.

இது குறித்து உரிய நிறுவனங்கள் கலந்துரையாடியதுடன் கட்டண அதிகரிப்புக்களை மேற்கொள்ளவில்லை என எழுத்துமூலமான கடிதங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு சேவைகள் தொடர்பான கட்டணங்களை அங்கீகரிக்கும் பணிப்பாளராக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உள்ளது.

கையடக்க தொலைபேசி

அவ்வாறான நிலையில் எந்தவொரு கையடக்க தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கும் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி அதிகரிக்கப்படும் இணைய கட்டணங்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும் என பணிபாளர் இந்திரஜித் ஹந்தபாங்கொட மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *