ஜெக்குலின் செய்த சாதனை!

ByEditor 2

Jan 14, 2025

பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இதுவரை யாரும் படைத்திடாத சாதனையை ஜெக்குலின் செய்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இதில் கடந்த வாரம் அருண் பிரசாத் மற்றும் தீபக் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். எனவே, டொப் 5 என போட்டியாளர்களின் எண்ணிக்கை சுருங்கியிருக்கிறது.

பைனலை நோக்கி நகரும் வேளையில் கடந்த வாரம் எல்லா போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டிருந்தார்கள். இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் இருந்து 15ஆவது வாரம் வரையுமே வாரம் தவறாமல் நாமினேசன் ஆன போட்டியாளர் என்ற சாதனையை தக்க வைத்திருக்கிறார் தொகுப்பாளர் ஜெக்குலின். 

போட்டியை சீரியஸாக எடுத்துக் கொண்டு விளையாடியது, டாஸ்க்கில் ஆர்வமாக பங்கேற்றது போன்ற விஷயங்கள் எல்லாம் முதல் வாரத்தில் இருந்தே ஜெக்குலினை போட்டியில் தக்க வைத்திருக்கிறது என்கிறார்கள் பிக்பாஸ் பார்வையாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *