இலங்கை தூதரகத் தலைவர்கள் – பிரதமர் சந்திப்பு

ByEditor 2

Jan 11, 2025

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதுக்குழு பிரதானிகள் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.

வர்த்தகம், சுற்றுலா வியாபாரம் மற்றும் இரு தரப்பு உட்பட பல தரப்பு ஒத்துழைப்பின் ஏனைய பிரதான துறைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் உலகச் சந்தையில் இலங்கை தயாரிப்புகளுக்கென புதிய சந்தர்ப்பங்களை ஆய்வு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தினார்.

நிரந்தர பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வதற்கென தேசிய தொழிற்துறையை அபிவிருத்தி செய்யும் அதேநேரம் முன்னேறி வரும் சந்தைகளில் பலம்வாய்ந்த இருப்பை ஸ்தாபிப்பதன் தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *