திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு

ByEditor 2

Jan 11, 2025

கரை உடையும் அவதானம் நிலவும் கலென்பிந்துனுவெவ புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தின் கரை உடையும் அவதானம் தொடர்ந்தும் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கலென்பிந்துனுவெவவில் உள்ள புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தின் தெற்கு மதகிற்கு செல்வதற்காக கட்டப்பட்ட மண் அணையில் நீர்க்கசிவு இருப்பது நேற்று (10) காலை கண்டுபிடிக்கப்பட்டது.

நீர்த்தேக்கத்தின் மதகின் இருப்பிடம் சுமார் 27 அடி ஆழம் கொண்டது, இதன் காரணமாக, அந்த இடத்தில் நீர் அழுத்தமும் அதிகமாக உள்ளது.

பின்னர், நீர்ப்பாசனத் திணைக்களம் இராணுவம், பொலிஸ் மற்றும் கிராமவாசிகளின் உதவியுடன் நீர்க்கசிவை அடைக்க ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டது.

அதன்படி, நேற்று பிற்பகலுக்குள், மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி மண் அணையில் நீர்க்கசிவை அடைக்க முடிந்தது.

இருப்பினும், நீர்த்தேக்கத்தின் கரை உடைந்த இடத்தில் தற்போது நீர்க்கசிவு மீண்டும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

நீர்த்தேக்கத்தின் கரை உடைந்தால், பல கிராமங்கள் பாதிக்கப்படும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கிராமத்தில் உள்ள 30 குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *