பதுளை – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு

ByEditor 2

Jan 9, 2025

ஓஹியா இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் இன்று(09) பிற்பகல் பாறை சரிந்து விழுந்ததால், பதுளை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பொடிமணிகே ரயிலின் சாரதி, ரயில் பாதையில் உடைந்த தண்டவாளத்தை முன்கூட்டியே கவனித்து ரயிலை நிறுத்தியதால், ரயில் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *