2004ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி பேரழிவின் 20ஆம் ஆண்டு நினைவாக லங்காபேஸ். காம் மற்றும் ஹுதா ஃபவுண்டேஷன் இணைந்து ஒரு சிறப்பு இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளன.
இம்முகாம் சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களின் நினைவாகவும், சமூக பொறுப்புணர்வை ஊக்குவிக்கவும் நடத்தப்படுகிறது.
இச்சிறப்புமுகாம் சனிக்கிழமை, ஜனவரி 11, 2025, அன்று காலை 9:00 மணிமுதல் மாபோலையின் அல் அஷ்ரப் தேசிய பாடசாலையில் நடைபெற உள்ளது.
சமூகத்தின் மீது பொறுப்புணர்வை வெளிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக களமிறங்கவும் அனைவரையும் இந்த மகத்தான முயற்சியில் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றனர்.
திகதி: ஜனவரி 11, 2025
நேரம்: காலை 9:00A.M மணி முதல் 3:00P.M மணி வரை
இடம்: அல் அஷ்ரப் தேசிய பாடசாலை, மாபோலை
இச்செய்தி அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, இரத்ததானம் செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றும் இவ்விழாவில் பெருமளவான மக்கள் பங்கேற்க வேண்டும்.
“உங்கள் ஒரு தானம் பல உயிர்களை காப்பாற்றும்.”
இம்முகாம் லங்காபேஸ் மற்றும் ஹுதா ஃபவுண்டேஷன் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.

