சுவசரிய மன்ற தலைவர்; ஏ.எம்.என். ரத்நாயக்க

ByEditor 2

Jan 6, 2025

1990 சுவசரிய மன்றத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (06) வழங்கி வைத்தார்.

அதன்படி, 1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவராக ஏ.எம்.என். ரத்நாயக்க மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஆர்.ஜே.எம்.ஏ.பீ.சம்பத் மற்றும் நளீன் பெரேரா ஆகியோர் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *