விமான விபத்து – இருவர் பலி

ByEditor 2

Jan 3, 2025

மெரிக்கா – கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று (03) வர்த்தக கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது. விபத்தில் காயமுற்ற பத்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எட்டு பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டதாக ஃபுல்லர்டன் பொலிஸ் அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கியது ஒற்றை எஞ்சின் கொண்ட RV-10 ரக விமானம் என்று ஃபெடரல் ஏவியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *