மாலி இராஜ்ஜியத்தில் இருந்து இலங்கை வந்த கப்பல்

ByEditor 2

Jan 2, 2025

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில் இருந்து, 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் குறித்த கப்பல் இலங்கைக்கு வந்தடைந்துள்ளது..

நாட்டை வந்தடைந்தவர்கள் கொழும்பு, களனி ரஜமஹா விகாரை, பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.

Aitken Spence Travel பயண நிறுவனத்தின் தலையீட்டுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பல் இன்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சென்றடையவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *