முதலில் கிரிபாட்டி தீவில் புத்தாண்டு உதயமானது, அதைத் தொடர்ந்து நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் புத்தாண்டு மலர்ந்தது.
அதன் பின்னர் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு புத்தாண்டு உதயமானது.
புத்தாண்டு 2025 பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் பிரமாண்டமான நிகழ்வுகளில் இணைந்து வரவேற்கப்பட்டது.
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நேற்றிரவு (31) காலி முகத்திடல் உள்ளிட்ட கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளிலும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்
நாட்டின் பல இடங்களில் வான வேடிக்கை உள்ளிட்ட பட்டாசுகள் வெடித்து புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
2025 புத்தாண்டை முன்னிட்ட பொலிஸார் விசேட பாதுகாப்பு திட்டத்தையும், வீதி போக்குவரத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.
மலர்ந்துள்ள 2025 புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டாக அமைய வேண்டு.