“பொலிஸ் அறிவிப்பு: YouTube தவிர மற்ற வலைத்தளங்கள் வழமைக்கு”

ByEditor 2

Dec 31, 2024

இலங்கை பொலிஸின் யூடியூப் சேனல் உட்பட பல உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பான சமீபத்திய நிலைமை குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram, YouTube மற்றும் x கணக்குகள் 30.12.2024 அன்று மாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram மற்றும் x கணக்குகள் தற்போது மீண்டும் இலங்கை பொலிஸின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் யூடியூப் சேனல் இன்னும் இலங்கை பொலிஸின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

அதை பொலிஸின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சைபர் தாக்குதல் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *