பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும்போது அவதானம்!

ByEditor 2

Dec 30, 2024

பண்டிகை காலங்களில் பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும் போது விசேட அவதானம் செலுத்துமாறு பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நல நிபுணத்துவ வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் சமீப காலமாக பட்டாசு தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தும் பெற்றோரினால் விபத்துக்கள் ஏற்படக் கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், ஆபத்தான இடங்களில், குறிப்பாக நீர் நிலைகளில் பிள்ளைகள் நீந்துவது, நீராடுவதை தவிர்க்கப்பட வேண்டும் என வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *