உப்பு பற்றாக்குறை வதந்திகளை தவிர்க்கக் கோரிக்கை

Byadmin

Dec 29, 2024

நாட்டில் உப்புப் பற்றாக்குறை குறித்த வதந்திகளை தவிர்க்குமாறு, ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி.நந்தனதிலக்க பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய உப்பு விநியோகம் நாட்டின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு சராசரி குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு இரண்டு 400 கிராம் சிறிய பொதிகள் மற்றும் ஒரு கிலோகிராம் படிக உப்பு போதுமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தில் தற்போது 6,000 மெட்ரிக் தொன் உப்பு கையிருப்பில் உள்ளது என்றும், இது ஜனவரி வரை நீடிக்கும் என்றும் தலைவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

அத்துடன், எந்தவொரு பற்றாக்குறையையும் தடுக்க 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்யத் திட்டங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண உப்பளங்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டதே தற்போதைய நிலைக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த ஆண்டு உப்பு உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
எனவே பற்றாக்குறை வதந்திகளை நம்பி தேவையற்ற முறையில் உப்பை சேமித்து வைப்பது தேவையற்றது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தில் தற்போது 6,000 மெட்ரிக் தொன் உப்பு கையிருப்பில் உள்ளது என்றும், இது ஜனவரி வரை நீடிக்கும் என்றும் தலைவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

அத்துடன், எந்தவொரு பற்றாக்குறையையும் தடுக்க 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்யத் திட்டங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண உப்பளங்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டதே தற்போதைய நிலைக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த ஆண்டு உப்பு உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள உப்பளங்களை மறுசீரமைத்து உற்பத்திக்குப் பயன்படுத்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில், யாழ்ப்பாண உப்பளங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ஜனவரி நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என்றும், மார்ச் 2025இற்குள் உற்பத்தி ஆரம்பிக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *