இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் சில வாரங்களில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டு, புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்துவதற்கான முதல் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.