மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்திய நாமல்

ByEditor 2

Dec 28, 2024

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங்கின் உடலுக்கு இன்று (28) இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தியுள்ளார்.

உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் உயிரிழந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டில்லியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு வெள்ளிக்கிழமை (27) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

உடல் நலக்குறைவால் உயிரிழந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டில்லியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *