வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ByEditor 2

Dec 28, 2024

தேசிய புலனாய்வு பிரிவிற்கு அலுவலகம் அமைப்பதற்காக வவுனியா நகரப் பகுதியில் காணி கோரப்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.  

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் நேற்று (27) இடம்பெற்றது.    

காணியற்ற அரச திணைக்களங்கள், தேசிய புலனாய்வு அலுவலகம் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியன தமக்கு நகரப் பகுதியில் காணி ஒதுக்கித் தருமாறு வவுனியா பிரதேச செயலகத்திடம் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தது.
 
அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவது தொடர்பாக கடந்த மாசி மாதம் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்  அனுமதி கோரப்பட்டிருந்தது.

எனினும், குறித்த காணி விடயத்தில் தேசிய புலனாய்வு அலுவலகத்தின் காணிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக நேற்று (27) பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *