அதிவேக நெடுஞ்சாலையில் திருட்டு சம்பவங்களை அறிய STF உதவி

ByEditor 2

Dec 26, 2024

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள மின் வடங்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடி படையினரின் உதவியை பெறுவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த அதிவேக நெடுஞ்சாலையில் நீண்டகாலமாக போதைப் பொருள் பாவனையாளர்களால் இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை கருத்திற் கொண்டு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் பணிப்புரைக்கமைய, விசேட அதிரடி படையினரின் உதவியை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று, குறித்த பகுதிகளில் புதிதாக மின் வடங்கள் பொறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *