சர்வதேச விண்வெளி நிலையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

ByEditor 2

Dec 26, 2024

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், சாண்டா தொப்பிகள் அணிந்து கிறிஸ்துமஸை பண்டிகையை கொண்டாடிய நிகழ்வு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாசா வெளியிட்ட காணொளியில், சுனிதா வில்லியம்ஸ் சிவப்பு சட்டை அணிந்திருப்பதையும், மற்ற வீரர்கள் சாண்டா தொப்பிகளுடன் கிறிஸ்துமஸ் உற்சாகத்தில் ஈடுபட்டிருப்பதையும் காண கூடியாத இருந்தது.

இதேவேளை, இந்தக் காணொளி பலரிடையே தற்போது கேள்விகளை எழுப்பியுள்ளது. 8 நாட்கள் பயணமாகக் கடந்த ஜூன் 5 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த வீரர்கள், தொழிநுட்பக் கோளாறு காரணமாகப் பல மாதங்களாக அங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீரர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர நாசா 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில்தான் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், 8 நாட்கள் பயணத்துக்குத் திட்டமிட்ட நாசா அவர்கள் விண்வெளியில் சிக்குவார்கள் என்று தெரிந்தே டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ்க்கு தேவையான அலங்கார மரம், சாண்டா தொப்பி உள்ளிட்டவற்றைக் கொடுத்து அனுப்பியது எப்படி என்ற கேள்வியைப் பலர் முன்வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *