அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி அபிலாஷ்

ByEditor 2

Dec 26, 2024

சுனாமி பேபி அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது அஞ்சலியை வியாழக்கிழமை(26) செலுத்தினார்.

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியாகின்றது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது 2004.12.26 அன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோல கல்லோலபட்டது.

இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக சுனாமி பேபி 81 எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக மாறினாயவர் ஜெயராசா அபிலாஷ். காரணம் அந்த குழந்தை தங்களுடையது எனது 09 தாய்மார்கள் போராடினர்.

பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது. இர்தனையடுத்து ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

பின்னர் 52 நாட்களின் பின்னர் ஜெயராசா யுனித்தலா தம்பதியினர் களின் புதல்வனே அபிலாஷ் என நிரூபணமாகியது. பின்னர் அந்த குழந்தை ஜெயராசா யுனித்தலா தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் வசித்து வரும் அபிலாஷ் அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத் தூபி ஒன்றையும்அமைத்து வழிபாடு செய்து வருகின்றார்.

தற்போது 20 வயதுடைய சுனாமி பேபி அபிலாஷ் ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக பெற்றோருடன் தனது அஞ்சலியை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *