70 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.காணித் தகராறு தொடர்பான நீதிமன்ற வழக்கின் பின்னணியில் இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
டிக்வெல்ல தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 70 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவர் விஷ ஊசியை உட்கொண்டதாக கூறி மாத்தறை, பதிகம வைத்தியசாலையில் டிசம்பர் 20ஆம் திகதி பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு 4 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (24) மாலை உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்குள் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் விஷ ஊசி போட்டுவிட்டு தப்பிச் சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன.