மல்கம் ரஞ்சித் அதிருப்தி

Byadmin

Dec 25, 2024

ஜெரோம் பெர்னாண்டோவை ஒரு ஆயராக நிலைப்படுத்தப்பட்டமை செல்லாது என்றும் சமூகத்தை தவறாக வழிநடத்தும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க அடியார்கள் மத்தியில் உரையாற்றிய மல்கம் ரஞ்சித், ஜெரோமின் பெயரைக் குறிப்பிடாமல், இலங்கையில் உள்ள மத சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்த அவர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்குறித்த தனிப்பட்டவர், வேறு சிலரின் ஆதரவுடன் ஒரு பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது பேஸ்புக பதிவு ஒன்றில், தி குளோபல் அப்போஸ்தலிக் டையோசஸ் அண்ட் சேர்ச்சஸ் யுஎஸ்ஏவின் சினோடால்( The Synod of The Global Apostolic Dioceses and Churches USA) ஆயராக தாம் நியமிக்கப்பட்டதாக ஜெரோம் பெர்னாண்டோ கூறியிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் ஆன்மீக ஆலோசகரான ஆயர் மார்க் பேர்ன்ஸ், இலங்கை போதகரான ஜெரோம் பெர்னாண்டோவை ஆயராக நிலைப்படுத்தப்பட்டதை அங்கீகரித்திருந்தார்.இந்த நிலையிலேயே கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கருத்து வெளியாகியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *