கோழி இறைச்சியை இலஞ்சமாக பெற்ற இருவர் கைது!

Byadmin

Dec 25, 2024

ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக வாங்கியவருமான வரி உத்தியோகத்தர் மற்றும் களப் பணியாளரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.கொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளருக்கு சொந்தமான கடையின் அடுத்த வருடத்திற்கான வர்த்தக அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக குறித்த சந்தேகநபர்கள் 1,170 ரூபா பெறுமதியான ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.விசாரணையின் போது, ​​முறைப்பாடு செய்த வர்த்தகரின் கடைக்கு முன்பாக சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெவெல்தெனிய உப அலுவலகத்தில் கடமையாற்றும் வருமான வரி உத்தியோகத்தர் ஒருவரும், மீரிகம பிரதேச சபையின் வீதி பிரிவில் கடமையாற்றிய பணியாளர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *