எதிர்க்கட்சி தலைவரின் நத்தார் தின வாழ்த்து

ByEditor 2

Dec 25, 2024

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் அமைதி மற்றும் அன்பின் அடையாளமாக புனித நத்தார் பண்டிகை உதயமாகியுள்ளது. 

இறைவனின் அன்பும் மனித கௌரவமும் மனிதநேயம் சார்ந்த சமூகத்திற்கு நம்பகமான அடித்தளத்தை அமைத்தது. அன்று இயேசு நாதர் போதித்த அமைதி, அன்பு, கருணை, சகவாழ்வு, இரக்கம் ஆகியவை இன்றைய நமது சமூகத்தை நாகரீகமாக்க போதுமானதாக இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நத்தார் தின வாழ்த்துச் செய்தியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை மையப்படுத்திய நத்தார் பண்டிகை கிறிஸ்தவர்களின் மத விழா மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் அனைத்து இனம், மதம், கட்சி, நிறம், இளையோர், முதியோர் என பாகுபாடின்றி கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகவும் உள்ளது. இதன் அர்த்தத்தை சரியாக புரிந்துகொண்டு நாமும் ஒரு நாடாக முன்னேற வேண்டிய நேரம் வந்துள்ளது. இந்த தருணத்தில் நமது நாடு எதிர்கொள்ளும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள வேண்டுமெனில் நாமும் இனம், மதம், வர்க்கம், கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன், நல்லிணக்கத்துடன், அன்புடன் செயல்பட வேண்டும்.

இது நாட்டின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது அடுத்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் வேளையில் ஒவ்வொரு வீட்டிலும் எதிர்பார்ப்பு விளக்குகளுக்கு பதிலாக முன்னேற்றத்தின் விளக்குகள் ஒளிரும்.  

இலங்கை வாழ் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் மகிழ்ச்சியான இனிய நத்தார் வாழ்த்துக்களை மனமார வாழ்த்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *