பிரதமரை சந்தித்த இலங்கைக்கான ரோமானிய தூதுவர்!

Byadmin

Dec 24, 2024

இலங்கையின் ரோமானிய தூதுவர் ஸ்டெலுடா அர்ஹிரே (Steluta Arhire) தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு நேற்று டிசம்பர் 23 ஆம் திகதி நாட்டைவிட்டு செல்ல முன்னர் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து சிநேகப்பூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இலங்கை மற்றும் ரோமானியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக பிரதமர், தூதுவருக்கு நன்றி தெரிவித்ததுடன் தூதுவரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது என பிரதமர் இங்கு உறுதிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் பிரதம செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக பிரதம செயலாளர் சாகரிக்கா போகஹவத்த மற்றும் வெளியுறவு அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா இயக்குனர் ஜெனரல் ஷோபிணி குணசேகர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *