சிறுவனின் உயிர் பலிக்கு யார் காரணம்?

ByEditor 2

Dec 24, 2024

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என குழந்தையின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அங்குருவத்தோட்ட, ஹல்தோட்டை, பீதிகமுவ பகுதியைச் சேர்ந்த, ஹொரணை பிரதான பாடசாலையில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவியான தனுஜ விக்கிரமாராச்சி என்பவரே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரின் ஆலோசனையின் பேரில் கடந்த 17 ஆம் திகதி அவர் பணிபுரியும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிரிழந்த பிள்ளையின் பெற்றோர் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

மறுநாள் (18) பிற்பகல் 01.30 மணியளவில், இது தொடர்பான சத்திரசிகிச்சைக்காக குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டதுடன், சத்திரசிகிச்சை நிறைவடைந்த போதிலும், குழந்தை சுயநினைவு பெறவில்லை.

பின்னர், பெற்றோர் மற்றும் உறவினர்களின் பலமான வேண்டுகோளுக்கு இணங்க, வைத்தியசாலை அதிகாரிகள் குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அன்றைய தினம் மாலை 6.45 மணியளவில் அனுமதித்தனர். நான்கு நாட்களுக்குப் பின்னர் நேற்று (22) மாலை சுமார் 4.30 மணியளவில் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்கள் பொலிசாருக்கு முறையிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *