மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்திற்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை இன்று (22) காலை பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மிமனவுடன் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.