மாபோலை ஜும்மா பள்ளிவாசல் வரவேற்பு மண்டபத்தில் இன்று (22.12.2024) மாபோலை, அஷ்ரபியா குர் ஆன் மத்ரஸாவின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
2012ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இம்மத்ரஸாவில் தற்போது 235 மாணவர்கள் இஸ்லாமியக் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.
மாணவர்களுக்குத் தகுந்த கல்வியையும் வழிகாட்டுதலையும் வழங்க 8 ஆசிரியர்கள் முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றி வருகின்றனர்.
இவ்விழா விழா மத்ரஸா அதிபர் சுஹைப் மௌலவி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஜம்-இய்யத்துல் உலமா சபை செயலாளர் அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்தின் உப தலைவரும் , LANKABASE நிறுவனத்தின் தலைவருமாகிய ஷெரீப் தவூத் முகமது பாஹிம், புத்தி ஜீவிகள், உலமாக்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் விழா மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு முக்கிய சின்னமாக அமைந்தது.





