வக்பு சபையின் விசாரணை ஒலிப்பதிவு – ஒருவர் கைது

ByEditor 2

Dec 21, 2024

வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் மருதானை பொலிஸாரினால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சபையின் அமர்வு அதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதியான கலாநிதி யூ.எல்.ஏ. மஜீட் தலைமையில், வக்பு நியாய சபையின் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம்.இல்யாஸ் மற்றும் சட்டத்தரணி ஏ.டப்ளியூ.எம். இம்தியாஸ் ஆகியோரின் பங்கேற்றலுடன் இன்று இடம்பெற்றது.இதன்போது, கல்கின்ன பள்ளிவாசல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விசாரணைகளை ஒலிப்பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த ஒலிப்பதிவினை வட்ஸ்அப் மூலம் பிரபல தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீனுக்கு அனுப்பியதாக குறித்த நபர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.கல்கின்ன பள்ளிவாசல் தொடர்பில் இன்றைய விசாரணைகளுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு விசாரணை அமர்வுகளையும் ஒலிப்பதிவு செய்து முஸ்லிம் சலாஹுதீனுக்கு அனுப்பியதாக குறித்த நபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தற்போது மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.கல்கின்ன பள்ளிவாசல் தொடர்பாக வக்பு நியாய சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் முதலாவது பிரதிவாதியாக தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.வக்பு நியாய சபையானது மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரங்களை கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *