MP பதவியை இழக்கும் அபாயத்தில் முன்னாள் சபாநாயகர்

ByEditor 2

Dec 20, 2024

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார்.

தனது கலாநிதி பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“.. தனது கல்வி தகமையை வெளிப்படுத்த நேரம் வழங்குமாறு அசோக ரன்வல கோரியுள்ளார். அதற்கமைய, அவருக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்குள் அவர் தனது சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்றால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும்..”

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டப்பின்படிப்பு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, அவர் பதவி விலகியிருந்தமையும் குறப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *