சமூகத்தை பாதிக்கும் தீர்மானங்களை எதிர்க்க தயங்கமாட்டோம் என்கிறார் பிரதியமைச்சர் முனீர் முளப்பர்.
பிரதியமைச்சர் முனீர் முளப்பர் 2021-.09.-13 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி “அல்லாஹ்” என்ற ஒரு கருத்தை தெரிவித்தார். மறுநாள் பாராளுமன்றம் முதல் பத்திரிகைகள் வரை அனைத்திலும் இதுதான் தலைப்புச் செய்தி. அந்த சந்தர்ப்பத்தில் இந்த கருத்து போலியானது என்பதை நிரூபித்து இஸ்லாம் மற்றும் தீவிரவாதம் பற்றி சிங்கள மொழியில் தெளிவுபடுத்துவதற்கான கட்டாய தேவை ஊடவியலாளர்களாகிய எமக்கு ஏற்பட்டது. அதற்காக நாங்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முதல் முஸ்லிம் தலைவர்கள் பலருடனும் உரையாடினோம். இறுதியில் ஞானசார தேரரின் இந்த கருத்துக்கு சிங்களத்தில் தெளிவாக பதில் வழங்கக்கூடிய ஒரு மௌலவியை சந்தித்தோம். அன்று, இஸ்லாமிய வெறுப்பும் இனவாதமும் தலைக்கு மேல் ஆடிக் கொண்டிருந்த நேரத்தில் தைரியமாக முன்வந்து ஞானசார தேரரின் கருத்துக்கள் அத்தனையும் பொய் என்பதை நிரூபித்தவர்தான் மௌலவி தான் முனீர் முளப்பர். இன்று அவர் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்.