அமைச்சர் ஒருவரின் எம்.பி பதவிக்கு எதிராக வழக்கு!

Byadmin

Dec 19, 2024

அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கி ரிட் ஆணையை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய சுதந்திர முன்னியின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

அதில், பிரதிவாதிகளாக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற பொது செயலாளர், ருஹுனு பல்கலைக்கழகம் மற்றும் அதன் உபவேந்தர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.உபாலி பன்னிலகே பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட போது, ​​அவர் ருஹுனு பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான பேராசிரியராக பணியாற்றியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச சேவையில் ஈடுபட்டிருக்கும் வேளையில் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது, அரசியலமைப்பின் 91வது பிரிவின் கீழ் சட்டத்திற்கு முரணானது எனவும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு தகுதியற்றதாகும் எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன்படி, அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேவை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தல், பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்பதற்கும் தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறும், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக ரிட் ஆணை பிறப்பிக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *