உமது “கண்களை விரித்துப் பார்க்காதீர்கள்!”

ByEditor 2

Dec 19, 2024

லும், அவர்களில் சில பிரிவினருக்கு நாம் அனுபவிக்கக் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை விரித்துப் பார்க்காதீர்கள்; (இவைகள்) அவர்களை சோதிப்பதற்காக நாம் கொடுத்துள்ள வாழ்வியல் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். ✍ அல்குர்ஆன் : 20:131

இந்த வசனம் கற்பிக்கும் அரும்பெரும் பாடம் பற்றிய விழிப்புணர்வு மனிதனிடம் இல்லாமையால் தான் அவனுக்குள் தொகையான பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன, முடிவில்லாத சோகத்தை விலைக்கு வாங்குறான், தீராத துக்கத்தில் மூழ்கிப் போகிறான். 

தன் நண்பன் அணியும் கவர்ச்சியான ஆடையை கண் விரித்துப் பார்க்கிறான், தன் பக்கத்து வீட்டவன் வாழும் ஆடம்பர வீட்டில் கண் வைக்கிறான், தன் வகுப்பு நண்பன் பயணிக்கும் சொகுசு வாகனத்தை நோட்டமிடுகிறான், சென்ற இடத்தில் கண்ட கவர்ச்சியான வீட்டு தளபாடங்களை அவதானிக்கிறான், தன் சகோதரன் உண்ணும் அறுசுவை உணவுத்தட்டில் மோகம் கொள்கிறான். 

பின்னர் தாழ்வுச் சிக்கள் அவனை தொத்திக்கொள்கிறது, இந்த வாழ்க்கை வசதிகள் கொண்டவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக எண்ணிக் கொள்கிறான், அவர்கள் தன்னை விட சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என கருதிக்கொள்கிறான். 

அவைகளை அடைய முழு மூச்சுடன் களத்தில் இறங்குகிறான், பிற்பாடு இருந்த மகிழ்ச்சியையும் தொலைத்துவிடுகிறான். கண்களை நீட்டியவன் கடைசியில் கைகளையும் நீட்ட நேரிடுகிறான். 

நீ நல்லவனாக இருந்தாலும் இத்தகைய வலையில் நீ சிக்கக் கூடாது என்றுதான் உன் இறைன் ஆசைப்படுகிறான். அதனால் தான் ‘கண்களை விரித்துப் பார்க்காதீர்கள்!” என்று கட்டளையிடுகிறான். 

இந்த பொருள் மோகத்தால் வந்து சேரப்போவது மனவருத்தமும், பொறாமை உணர்வும், பேராசையும்தான். பொதுவாக மற்றவர்கள் வாழ்க்கை வசதிகளை நாம் உற்று நோக்கி அவதானிப்பதால் தான் தாழ்வுணர்வும், தன்மானப் பிரச்சினைகளும்  மனிதனை வந்து சேர்க்கின்றன. 

ஆதலால் “கண்களை விரித்துப் பார்க்காதீர்கள்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *